ஜிஎஸ்டி கவுன்சில் பல பிரபலமான உணவுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதால், சில பொருட்களின் விலை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனால் நுகர்வோர் விரைவில் தங்கள் வீட்டுச் செலவுகளை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.. வெண்ணெய், கண்டென்ஸ்டுபால், ஜாம், காளான்கள், பேரீச்சம்பழங்கள், நட்ஸ் போன்ற பொருட்கள் தற்போதைய 12 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்திலிருந்து வெறும் 5 சதவீதமாக மாற வேண்டும் என்று ஃபிட்மென்ட் கமிட்டி முன்மொழிந்துள்ளது. […]

ஜிஎஸ்டி கவுன்சில் அடுத்த மாத தொடக்கத்தில் கூடும் போது, ​​அனைத்து உணவு மற்றும் ஜவுளிப் பொருட்களையும் 5 சதவீத வரிக்கு மாற்றும் திட்டம் குறித்து விவாதிக்கும் என்று கூறப்படுகிறது. சிமென்ட் உள்ளிட்ட பல பொருட்கள், சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள் போன்ற பொது நுகர்வு சேவைகள் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்கும் திட்டம் குறித்தும் கவுன்சில் விவாதிக்கலாம். வரி முறையை எளிமைப்படுத்தவும், அனைத்து வகைப்பாடு கவலைகளையும் முடிவுக்குக் கொண்டுவரவும் அரசாங்கம் இலக்கு […]

நாடு முழுவதும் தற்போதைய பல அடுக்கு வரி விதிப்பு முறைக்கு பதிலாக, இனிமேல் 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வரி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, வீட்டு விலைகளை கணிசமாக குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு […]

பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில், மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும் என்று தெரிவித்தார்.. தீபாவளிக்கு முன்னதாக ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று உறுதியளித்தார். பண்டிகை காலத்திற்கு முன்பு ஜிஎஸ்டி வரி விகிதங்களை பெருமளவில் குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதால், பொருட்கள் கணிசமாக மலிவாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார். “தீபாவளிக்கு ஒரு சிறந்த பரிசை வழங்கப் போகிறேன். கடந்த 8 ஆண்டுகளில், ஜிஎஸ்டியில் […]

இந்திய வரி செலுத்துவோர் இன்று கடுமையான சுமையை எதிர்கொள்கின்றனர், கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாவசியப் பொருள் மற்றும் சேவைக்கும் அதிக வரியை செலுத்தி வருகின்றனர்.. ஆனால் பொது நலன் அல்லது பாதுகாப்பின் அடிப்படையில் மிகக் குறைந்த பிரதிபலனைப் பெறுகிறார்கள். அதற்கு காப்பீடு ஒரு பிரதான உதாரணம் என்று சொல்லலாம்.. இதுகுறித்து வெங்கடேஷ் அல்லா என்ற நபர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ காப்பீட்டில் நீங்கள் 18% GST […]

இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பான கட்டணங்களை அண்மையில் ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்தது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும், தங்கள் வங்கிக் கணக்கு அல்லாத பிற வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முறை பணம் […]