தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” தொடக்க விழா நடைபெறும் இடம், பாதுகாப்பு காரணங்களால் உசிலம்பட்டியிலிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், தமிழர் மரபில் தொன்றுதொட்டு வரும் தாய்மாமன் சீர்முறையைப் பிரதிபலிக்கும் வகையிலும் […]

