கோவை மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால், […]

கோவை, நீலகிரிக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கடந்த சில தினங்களாகவே நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை கனமழை பெய்தது. அதன் பிறகு வானிலை அடியோடு மாறியது போல, மழை பெய்த பகுதிகளில் எல்லாம் வெயில் கொளுத்தியது. குறிப்பாக சென்னை, […]

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலா பகுதியில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் அட்டமலா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வயநாட்டில் பெய்த கனமழைக்குப் பிறகு, முண்டகை பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதியில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கனமழை காரணமாக, புன்னா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கிராம சாலை வெள்ளத்தில் மூழ்கியது. சேற்று நீர் ஆற்றில் பாய்ந்தது. எங்காவது நிலச்சரிவு ஏற்பட்டதா […]

தென்மேற்கு பருவமழை இயல்பை விட இந்த ஆண்டு சற்று முன்னதாகவே தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இந்தநிலையில், இயற்கைப் […]