ஜனவரி 12-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்; புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் 200 பேர் விபத்தில் …