இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் கடலில் தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 280க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்ட கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பகிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிக்கொண்டு மனாடோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் […]

இன்றைய நகர வாழ்க்கையில் திருமணத்திற்கு முன் உடல் உறவு கொள்வது மிகவும் சாதாரணமானது. ஆனால் சில நாடுகளில் இந்த வகையான கலாச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. இந்தோனேசியா: 2022 ஆம் ஆண்டு இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தின்படி, திருமணத்திற்கு முன்பு ஒருவருடன் உடல் உறவு கொள்வது இங்கு குற்றமாகக் கருதப்படுகிறது. அதே போல் திருமணம் தாண்டிய உறவும் பெரும் குற்றமாக […]

இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான பாலிக்குச் சென்று கொண்டிருந்தபோது கப்பல் கவிழ்ந்து நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 38 பயணிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். KMP துனு பிரதாமா ஜெயா என்ற அந்தக் கப்பல், கிழக்கு ஜாவாவின் பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 25 நிமிடங்களுக்குப் பிறகு, பாலி ஜலசந்தியில் விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் […]

ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, திடீரென வீசிய பலத்த காற்றால் அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. பலத்த மழைக்கு மத்தியில் வந்த விமானம், தற்காலிகமாக திசைதிருப்பப்பட்ட போதிலும் பாதுகாப்பாக தரையிறங்க முடிந்தது. இந்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரும் விமான விபத்து தற்காலிகமாக […]

இந்தோனேசியாவில் லக்கி-லக்கி என்ற எரிமலை வெடித்து, காற்றில் 11 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் மேகத்தை பரப்பியது, இதனால் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை செவ்வாய்க்கிழமை பெரிய அளவில் வெடித்துள்ளது. இந்த வெடிப்பால் காற்றில் 11 கிமீ உயரத்திற்கு சாம்பல் மேகம் பறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அதிகபட்ச எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா 270 மில்லியன் […]

இந்தோனேசியாவின் பண்டா ஆச்சேவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபட்டதற்காக ஒரு இளம் தம்பதியினருக்கு பொது இடத்தில் 100 கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டது, இது பிராந்தியத்தின் கடுமையான ஷரியா சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தண்டனையாகும். மேலும் இஸ்லாமிய சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும் ஒரே இந்தோனேசிய மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த உலகளாவிய கவலைகளை மீண்டும் தூண்டிவிட்டது. மாகாண தலைநகரில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த சவுக்கடி நடந்தது, அங்கு […]