கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 12 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்: முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்..? விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொளிகள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் […]

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், கரூர் நெரிசல் சம்பவம் குறித்த விசாரணையில் இருந்து விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தெரிவித்துள்ளார். கரூரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய, பாஜக சார்பில் ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாய கூட்டணியின் 8 எம்.பி.க்கள் கொண்ட குழு இன்று தமிழகம் வர உள்ளது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு […]

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வரும் நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் தனது கண்டனத்தை […]

கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான […]

தவெக மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் பதிவு செய்த வழக்கு மதுரை கூட கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர். இந்த மாநாட்டின் போது […]

மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் கூலி இல்லாமல் வேலை செய்ய மறுத்ததால், குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் ஒரு தலித் நபர் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை அடித்தது மட்டுமல்லாமல், அவரது குடிசைகளையும் தீக்கிரையாக்கினார். நேற்று மாலை, மல்பசாய் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.. தற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ரிங்கு சக்பர் என்பவர், ரவி […]

இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதா..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் […]

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில்காரைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 2025 – ம் ஆண்டு மே 19 அன்று, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் […]