இன்றைய போர்கள் வெறும் துப்பாக்கிகள் அல்லது ஏவுகணைகளால் மட்டுமே நடைபெறுவதில்லை. அதற்கு புதிய வடிவம் கிடைத்துள்ளது.. அது மைக்ரோ ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள். இவை மிகச் சிறிய அளவில் இருப்பினும், அவற்றின் சக்தி மற்றும் தொழில்நுட்பம் மிகப் பெரிய ஆயுதங்களுக்கே சவாலாக உள்ளது. மைக்ரோ ட்ரோன் என்பது மனிதர் இல்லாத வானூர்தி (UAV) ஆகும். இதன் எடை சில நூறு கிராம் முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (நெசெட்) உரையாற்றினார்.. அப்போது எம்.பிக்கள் எழுந்து நின்று கைதட்டி ட்ரம்பை பாராட்டினர்.. அமர்வின் போது, ​​வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி ஆகியோர் அமெரிக்க-இஸ்ரேல் உறவுகளை வலுப்படுத்துவதில் வகித்த பங்கிற்காக சிறப்புப் பாராட்டுதல்களைப் பெற்றனர். நெசெட்டில் உரையாற்றிய ட்ரம்ப், இதை “ஆழ்ந்த மகிழ்ச்சி, உயர்ந்து வரும் நம்பிக்கை […]

காசாவில் இரண்டு வருடங்களாக நீடித்து வரும் பேரழிவுகரமான போரை நிறுத்தும் போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் உயிருடன் இருக்கும் 20 பணயக்கைதிகளையும் விடுவித்துள்ளது. நாளடைவில், 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை ஹமாஸ் 20 பணயக்கைதிகளை விடுவித்தார். அவர்கள் இஸ்ரேலில் உள்ள குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செஞ்சிலுவைச் சங்கம் இந்த […]

உலகின் டாப் 10 சக்தி வாய்ந்த விமானப்படைகள் குறித்து பார்க்கலாம்.. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் போன்ற சமீபத்திய மோதல்கள் காரணமாக உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.. தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பல நாடுகளும் தங்கள் ராணுவம் மற்றும் வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன.. குறிப்பாக பல நாடுகள் சக்திவாய்ந்த விமானப்படையை வைத்திருக்கின்றன.. 2024 வரை தொகுக்கப்பட்டு 2025 இல் உலக […]

ஏமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுத்தி பிரதமர் கொல்லப்பட்டார். ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி, கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சனாவில் உள்ள தனது குடியிருப்பில் இருந்த போது இந்த வான்வழி தாக்குதல் நடந்ததாகவும், அதில் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டார் என்றும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.. இஸ்ரேல் இராணுவம் கடந்த வியாழக்கிழமை இந்த தாக்குதலை நடத்தியது. […]

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதனை தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் இதுவரை ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன. இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. இந்த […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து நேற்றைய தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த […]