fbpx

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ‌

தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெற்றது. இந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் முட்டியதில் …

இன்று காலை 7 மணிக்கு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்களில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கு 2,026 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் …

பொங்கல் என்றாலே நம் அனைவருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தான் நினைவுக்கு வரும். தமிழகம் முழுவதுமே பொங்கல் பண்டிகை தொடங்கி பல மாதங்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள்  சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் வரலாறு குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு போட்டியாக மட்டுமல்லாமல் வீரம் மற்றும் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக …

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான வாடிவாசல் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. காளைகளின் உரிமையாளர்களுக்கும், களமிறங்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்குகிறது.

பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 14-ம் தேதி அவனியாபுரத்திலும், 15-ல் பாலமேட்டிலும், 16-ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் …

தமிழக பாரம்பரிய வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி தைப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என தொடர்ந்து திருவிழா கோலமாக தமிழர்கள் கொண்டாடுவர். இதையொட்டி …

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெயர் பெற்றது. இங்கு நவீன வசதிகளுடன் கூடிய ஜல்லிக்கட்டு விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த வாக்குறுதியின் அடிப்படையில் அலங்காநல்லூரில் உள்ள கீழக்கரையில் 66 ஏக்கர் நிலப்பரப்பில் 44 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரங்கம் அமைக்கப்பட்டது.

பல நவீன …

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைக்க உள்ளார்கள்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்ச்சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில் தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் புலப்படுத்தும் ஏறுதழுவுதல் …

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

பொங்கல் பண்டிகை மட்டுமல்லாது கோவில் திருவிழாக்கள் மற்றும் தேவாலய திருவிழாக்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. …

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை திறந்து வைக்க உள்ளார்கள். மேற்படி கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில், அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது.

மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in …

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரும் 24.01.2024-அன்று திறந்து வைக்க உள்ளார்கள். அன்றைய தினம் (24.01.2024) மேற்படி கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில், அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது.

மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் …