ரஷ்யா, ஜப்பான் அருகே 8.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்திலிருந்து சுனாமி எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, நிலநடுக்கம் ஆழமற்றது, வெறும் 19.3 கிலோமீட்டர் (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது, இது குறிப்பிடத்தக்க மேற்பரப்பு அதிர்வு மற்றும் சுனாமி […]

ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி பேரழிவு நிகழும் என்று புதிய பாபா வங்கா கணித்த ஜூலை 5 இன்றுதான். கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஜப்பானை சேர்ந்த ரியோ டட்சுக்கி (ryo tatsuki) என்ற பெண் ‘புதிய பாபா வங்கா’ என அழைக்கப்படுகிறார். மார்ச் 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி, 1995 கோபு பூகம்பம், பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம் போன்ற […]

ஜப்பானில் 9 பேரை கொன்று துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜாப்பானை சேர்ந்த ஷிரைஷி என்பவர், தற்கொலை எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து வந்தார். அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து, வருபவர்களை அவர் கொடூரமாகக் கொலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில் ஷிரைஷி இதுவரை 8 […]

ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள நெமுரோ தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது. சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, இந்த நிலநடுக்கம் கடலோரத்தில் நிகழ்ந்ததாகவும், அதன் மையப்பகுதி 42.8° வடக்கு அட்சரேகையிலும் 146.4° கிழக்கு தீர்க்கரேகையிலும் இருந்தது. தற்போது வரை, சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை […]

ஒவ்வொரு நாளும் உலகில் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏராளமான மக்கள் சாலை விபத்தில் உயிரிழப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 13 லட்சத்து ஐம்பதாயிரம் விபத்துகள் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன. இதன் கீழ் ஒவ்வொரு நாளும் சுமார் 3,700 பேர் கார் விபத்தில் உயிரிழக்க நேரிடுகிறது. இந்நிலையில்,  கம்பேர்  மார்க்கெட் ஆஸ்திரேலியா என்ற நிறுவனம் ஒன்று, உலகளவில் ஓட்டுநர் தரவு […]

முதல்வர், கோட் சூட் அணிந்து சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா சென்றதால் அரசு பணம் வீணாகியதை தவிர, தமிழகத்திற்கு முதலீடு ஏதும் வந்ததாக தெரியவில்லை. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு பதில் சொல்லாத முதல்வர், யாருடைய கேள்விக்கு பதில் சொல்வார் என்று தெரியவில்லை. மேகதாது அணை பிரச்சனையில் முதல்வர் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருந்தால் எப்படி […]

ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் தனது 2 நாள் சிங்கப்பூர் […]

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களை சந்திக்க உள்ளார். இன்று முதல் சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். […]