fbpx

அதிமுகவில் ஜெயலலிதாவின் வழக்கறிஞராக இருந்த ஜோதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். 2008இல் திமுகவில் இணைந்த ஜோதி, சிறிது காலத்திற்கு பின்னர் விலகி மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் ஜோதி. ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோரின் வழக்குகளை இவர்தான் பார்த்துக் கொண்டிருந்தார். இவருடைய திறமையை …

ஸ்டாலினும் அண்ணாமலையும் சேர்ந்து செய்கின்ற கூட்டுச்சதி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “எங்களுடைய கட்சித் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர்கள். ஜாதி, மத, இன, மொழி அனைத்தையும் தாண்டி பல திட்டங்களை தீட்டியவர்கள். அண்ணாமலையை பக்குவமில்லாத அரசியல் …

ஜெயலலிதாவை ‘இந்துத்துவா தலைவர்’ என குறிப்பிட்ட அண்ணாமலைக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான தலைவராகத் திகழ்ந்த ஜெயலலிதாவை ஒற்றை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்புகிறார் அண்ணாமலை. அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர் ஜெயலலிதா. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது …

சொத்து குவிப்பு வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியை பொன்முடி இழந்தார். இதையடுத்து, அவரது அமைச்சர் பதவியும் …

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவர் நிறுவிய ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்ததால், 1980களில் மிகவும் பிரபலம் அடைந்தவராக இருந்தார்.

மேல்மருவத்தூரைச் சேர்ந்த பங்காரு அடிகளார், பள்ளி ஆசிரியராகப் …

அதிமுகவின் சின்னம் முடக்கப்படலாம் என முன்னாள் ஐ.டி விங் செயலாளர் பகிரங்க கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணிக்கும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது. அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்ட வில் மற்றும் அம்பு …