முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் வெளிநாடு சென்று படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க எதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவர்க்கு தலா ரூ. 36 […]

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்களில் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 377 காலிப்பணியிடங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் […]

திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாக விளங்கும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான வைணவ திருத்தலம். இங்கே, மகாபாரதக் கதையின் ஒரு முக்கியமான தருணமான ‘பாண்டவர்களின் தூதராக’ கண்ணன் தோன்றும் காட்சி, கோயிலின் முக்கிய தரிசனமாக இருக்கிறது. இந்த கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோராலும் புதுப்பிப்பு மற்றும் விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக குலோத்துங்க சோழன், ராஜ ராஜ […]

இழந்த அழகை திரும்ப பெற, கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்க, செல்வம் பெருக, அண்ணன் தங்கை ஒற்றுமை நீடிக்க தரிசிக்க வேண்டிய ஆலயம் ஒன்று உள்ளது என்றால் அது திருக்கள்வனூர் கள்வ பெருமாள் கோவில்தான். காஞ்சிபுரம் நகரின் புனிதமான பாசுரங்களுக்கு நடுவே, திருக்கள்வனூர் என்றழைக்கப்படும் ஒரு அரிய தலத்தில், கள்வப் பெருமாள் திகழ்கிறார். இது திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 55வது தலம் ஆகும். இது தனிச்சிறப்புடன் காணப்படும் தலம். […]

ஆன்மிகக் கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்று சான்று. அவற்றுள் ஒன்று, காஞ்சிபுரத்தில் திகழும் சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில். இந்தத் தலத்தில் புராணங்கள், பண்பாட்டு வரலாறு மற்றும் பக்தி உணர்வுகள் மெல்லிய பின்னலாக மின்னுகின்றன. இந்தத் தலத்தின் பெருமையை பிரம்மா யாகம் வளர்த்த தலம் என்றும், புஜங்க சயனத்தில் பெருமாள் தலை மாற்றி நின்ற திருக்கோலத் தலம் என்றும் குறிப்பிடலாம். இந்த கோயிலின் வித்தியாசமான சயனக் கோலத்தையும், சரஸ்வதி தேவியின் […]

திருமாலின் 108 திவ்ய தேசங்களில் முக்கிய இடம் வகிக்கும் உலகளந்த பெருமாள் கோவில், தனிச்சிறப்புகளால் பக்தர்களை ஈர்த்துவருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள இந்த தலம் 47வது திவ்ய தேசமாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்குள்ளாகவே நான்கு திவ்ய தேசங்கள் திருக்காரகம், திருப்பாடகம், திருஊரகம் மற்றும் திருநீரகம் ஆகியவை அமைந்துள்ளன என்பது இதன் முக்கிய தனிச்சிறப்பாகும். இது, 108 திவ்ய தேசங்களில் வேறெங்கும் காண முடியாத அமைப்பாகும். இக்கோவிலில் வீற்றிருக்கும் மூலவர் உலகளந்த பெருமாள், […]

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் […]