இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் பேசியது, சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் களமிறங்கியுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். …