கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பொன் அழகிரி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தமிழ் செல்வன் உள்ளிட்ட 50 பேர் திமுகவில் இணைந்தனர். நேற்று இரவு, ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இந்த இணைப்பு நடைபெற்றது. கரூரில் […]

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில், பயற்சி மருத்துவர் சிகிச்சை அளித்த காரணத்தினால்தான் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி யோகப்பிரியா பிரசவத்திற்காக, கரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவத்திற்கு பின் கர்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின் அடுத்த, இரண்டு தினங்களில் யோகப்பிரியா உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், நீதி […]

செந்தில் பாலாஜி முன்னிலையில் கரூர் மாவட்ட மதிமுக, அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கூட்டணி கட்சியான மதிமுக நிர்வாகிகளை திமுக தன் கட்சியில் இழுத்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை இடம் தராததால் திமுக மீது அதிருப்தியில் […]

கரூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி பென்சில் தமிழரசன், போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி பென்சில் தமிழரசன் மீது ஏற்கெனவே திருட்டு, தாக்குதல், மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்ட நடவடிக்கை எடுத்தனர். அரிக்காரம்பாளையம் சாலை மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த தமிழரசனை போலீசார் பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு […]

சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரியை சினிமா பாணியில் சுமார் 18 கி.மீ தூரம் காரில் துரத்திச் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிடித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. சமீபத்தி கூட திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் அமைத்த ஸ்பெஷல் டீம், மணல் கடத்தலில் ஈடுபட்ட 26 லாரிகளை மடக்கி பிடித்தது. இந்நிலையில் இன்று […]

விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு கரூரில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துப் பேசியுள்ளார். நேற்று கரூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜய்காந்த் அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். இன்று காலை கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த […]