பொதுவாக பொதுமக்களிடமிருந்து ஏதாவது ஒரு பொருள் காணாமல் போனால் அதனை காவல்துறையினருக்கு தெரிவித்தால் அந்த பொருளை காவல் துறையினர் கண்டுபிடித்து தருவார்கள். ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தையே 2 கில்லாடி திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.அதாவது மதுரை கரிமேடு குற்றப்பிரிவில் பணியாற்றுபவர் பாலமுருகன் (40) இவருக்கு ரோந்து பணிக்காக மாநகர காவல் துறை சார்பாக ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. […]
madurai
கி.பி. 770 ம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்டவன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆவார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்கப் பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளை தொடங்கினார். குடை வரை கோவில் நிறைவு பெரும் தருவாயில் இவர் நோய்வாய்பட்டு […]
மதுரை மாநகர் கரிமேடு விஸ்வசாபுரி முதலாவது தெருவை சேர்ந்த அஜித் இவர் வாடகை வீட்டில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனையாளராகவும் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று இரவு அவருடைய வீட்டிற்குள் இருந்து பலத்தசத்தத்தோடு திடீரென்று வெடிச்சத்தம் கேட்டு இருக்கிறது. ஆகவே அருகே உள்ள வீட்டில் இருப்பவர்கள் அச்சமடைந்து வீட்டில் இருந்து வெளியேறினர். அப்போது அஜித்தின் வீட்டிலிருந்து குகை வந்திருக்கிறது இதன் காரணமாக, அந்த […]
பழனியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். நான் கடந்த 1992 முதல் 96 வரையிலான கல்வி ஆண்டில் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்ட படிப்பு முடித்தேன். இறுதியாக தேர்வு தேர்ச்சி பட்டியலில் எனது பெயர், தேர்வு எண் இல்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது பல்கலைக்கழகத்திற்கு சென்று விவரம் கேட்க அறிவுறுத்தினார்கள். பின்னர் பல்கலைக்கழகத்தில் கேட்டபோது […]
ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தின் 3வது முக்கிய நகரமாக மதுரை மாநகரம் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் சின்னம் மீன். அதை நினைவுப்படுத்தும் வகையில் மதுரை ரயில் நிலையத்தில் 1999-ல் 15 அடி உயரம், 3 டன் எடையில் 3 மீன்கள் கொண்ட வெண்கல சிலை 1999-ல் அமைக்கப்பட்டது. கடந்த […]
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்தவர் வாசு ராஜா (23). இவர் நாமக்கல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் அதே கல்லூரியில் படித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாசு ராஜா அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அத்துடன் […]
மதுரை மாவட்டம் எம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவானூர் கோவில் திருவிழாவில் முதல் மரியாதை பெறுவதில் அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலம், திமுகவின் கிளை செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை எழுந்தது. இது குறித்து இருதரப்பினரும் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். அதன் ஒரு பகுதியாக கருவானூரில் இருக்கின்ற முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலத்தின் வீட்டுக்குள் வேல்முருகன் தரப்பினர் புகுந்து தாக்குதல் நடத்தி அங்கிருந்த […]
மதுரை மாவட்டம் சமயநல்லூர் தொகுதி அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலம் சில தினங்களுக்கு முன்னர் இவருடைய சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் முதல் மரியாதை பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித்து இருதரப்பினருக்கும் ஏற்பட்ட காதல் குறித்து எம்.சத்திரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தான் இருதரப்பிற்குள் மறுபடியும் தகராறு உண்டாகி கடந்த 24 ஆம் தேதி இரவு 2 கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். சுப்பையா (65), சூர்யா(23), […]
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளேன். எடப்பாடி பழனிசாமியே எதிர்காலத்தில் பிரதமராக தகுதியுள்ளவர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரை துவரிமான் பகுதியில் சமுதாயகூடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிக் கூட்டத்தால் பிரயோஜனம் இல்லை. உப்புக்கு சப்பாக தான் அந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த […]
மதுரை மேலூர் அருகே உள்ள கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் இளமாறன் (83) இவருக்கு அண்ணாதுரை என்ற ஒரு மகன் மற்றும் மகள்கள் இருக்கின்றனர் தன்னுடைய பெயரில் இருந்த சொத்துக்களை பெற்றுக்கொண்ட மகன் மற்றும் மகள்கள் தன்னை சரியாக பராமரிக்க தவறிவிட்டதாக இளமாறன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடந்த வருடம் புகார் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மூத்த குடிமகன் பராமரிப்பு சட்டத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் […]