மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் தமிழக அரசாங்கம், அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்படுகிறது. அது போலவே, மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்திற்கான அடுத்த […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு […]

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிச்சேவல் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை வருவாய் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.. அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் வசதிகள், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று முறையிட்டனர்.. மேலும் பெண்கள் சிலர் மகளிர் உரிமைத்தொகை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.. அவர்களிடம் உரிய மனு மனு அளிக்குமாறும் விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை […]

விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000., இன்னும் 30 நாட்களில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது. பின்னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டது. இதை பெறுவதற்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், நான்கு சக்கர வாகனம் (கார், ஜீப் போன்றவை) வைத்திருக்கும் குடும்பங்களைச் […]

தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு, ஏற்கனவே விடுபட்ட பெண் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு இம்முறை கட்டாயம் ரூ.1000 கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் ஜூலை 15 தொடங்கி வருகின்ற நவம்பர் 14-ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது. இதுவரை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் இருப்பின் உடனடியாக […]

பொதுமக்கள் வழங்கும் மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள், வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறைவாரியாக தமிழ்நாடு துணை […]

பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி மற்றும் சொக்கலிங்கபுரம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஈடுபட்டார். அரசின் திட்டங்கள் முறையாக வந்து […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதலாக மூன்று விதிவிலக்குகளை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்ப பெண்களும், பிற ஓய்வூதத் திட்டங்களை ஓய்வூதியம் பெறுவோரும் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு உத்தரவு. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு […]

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட, தகுதியுள்ள பெண்கள் ஜூலை 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக, ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் […]