மகாராஷ்டிராவில் பரபரப்பான சாலையில் ஸ்கூட்டர் மீது காரை மோதி, கீழே தள்ளி இளைஞர் ஒருவரை படுகொலை செய்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் சிட்கோ பகுதியில் உள்ள N-7 பகுதி பஜ்ரங் சௌக் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. ஜிம்மிற்குச் சென்றுவிட்டு தனது ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்த தேவேஷ் என்ற பண்டி தீட்சித் என்பவர்தான் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். […]

