fbpx

மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதை குறிப்பிட்டு பள்ளத்தில் நிற்போரைப் படிகளில் ஏற்றிய திராவிட மாடல் அரசு என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட இயக்கமும் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாறும் பிரிக்க முடியாத உறவை கொண்டவை. நீதிக்கட்சி அரசு …

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் கட்ட கலந்தாய்வு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 …

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழக மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும், அவற்றில் பெரும்பாலானவை பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் …

முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, 22 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், அரசு கல்லூரிகளில் மொத்தம் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் …

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம், பிபிடி என மருத்துவம் சார்ந்த 19 படிப்புகள் உள்ளன. இதற்கான, பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் …

கவுன்சிலிங் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, என்.எம்.சியின் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் உள்ள 250 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது. என்.எம்.சியிடம் இருந்து அங்கீகாரம் பெறாததால் சீட் மேட்ரிக்ஸில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.

அதே போல் திருவள்ளூரில் உள்ள வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் …

எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான அகில இந்திய பொதுக் கலந்தாய்வு நடத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் ஒட்டு மொத்தமாக தேசம் முழுவதற்கும் கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையும், …

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் இரண்டு காலிப்பணியிடங்கள் இருக்கின்றன அவற்றினை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. மருத்துவ அலுவலர் பணியில் ஒரு காலியிடமும் செவிலியர் பணியில் ஒரு காலியிடமும் உள்ளது. அவற்றை நிரப்புவதற்காக …

தமிழ்நாடு அரசின் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக மெடிக்கல் ஆபிஸர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவ பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் தென்காசியில் வரவேற்கப்படுகின்றன. மெடிக்கல் ஆபிஸர் பணிகளுக்கு ஐந்து காலியிடங்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு ஐந்து காலியிடங்களும் மருத்துவ பணியாளர் பணியிடங்களுக்கு ஐந்து காலியிடங்களும் என மொத்தம் 15 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் …

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதன் மூலம் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது; 2014 ஆம் ஆண்டில் 377-ஆக இருந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 655 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்தம் 69 சதவீத …