உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். முதல் […]

சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 29-11-2022 நாளிட்ட மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கடிதத்தில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 -ம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் […]

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்; திமுகவில் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், துணைப் […]

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்னும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,210 அரசு பள்ளிகளில் இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் […]

விளம்பர பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் மட்டுமே செலவு ஆனதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவு செய்வதாக குற்றச்சாட்டை வைத்திருந்தார். இதற்கு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து, அனைத்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தபடவில்லை. மேலும் மாநிலம் […]

கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக தி.மு.க-வின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன் மாற்றியதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது அறிக்கை; தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் இருபது லட்சத்துக்கும் அதிகமான, எளிய பொதுமக்களை வாடிக்கையாளர்களாக கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில், கடந்த இரண்டு நாள்களாக […]

அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் 3 முட்டைகள் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாரம் 3 முட்டைகள் வழங்கப்படும் என உயர்த்தி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு […]

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் 2023-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து மருத்துவர்கள் மத்தியில் பல்வேறு ஐயங்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றை போக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் இன்று வரை […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட உள்ள விலையில்லா வேட்டி சேலைகள் தயாரிக்கும் பணி அதி வேகத்தில் நடைபெற்று வருகின்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதிக்குள் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் மக்கள் நியாயவிலைக்கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகளை வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் […]

தாவல் திலகம் குஷ்பு என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று முரசொலி நாளிதழ் நடிகை குஷ்புவுக்கு பட்டப்பெயர் வைத்துள்ளது. சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆர்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது பற்றி முரசொலி நாளிதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பல்வேறு கட்சித்தாவலில் தொடர்கின்றார். தேவையில்லாமல் முதல்வர் பற்றி பேசி வாய்த்துடுக்கை காண்பித்துள்ளார் என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. குஷ்பு அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்திற்குள் […]