fbpx

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தின் ஆளும் திமுக அரசு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் மூன்று குழுக்களை அமைத்தது. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத் துறை …

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரும் 24.01.2024-அன்று திறந்து வைக்க உள்ளார்கள். அன்றைய தினம் (24.01.2024) மேற்படி கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில், அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது.

மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் …

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்ப்பது ஏன்?’ என உயர்நிலைக் குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக திமுக எழுதியுள்ள கடிதத்தில்; ஏற்கெனவே 23.12.2023 அன்று சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த திமுகவின் கருத்துகளை கோரியது. இதற்கு திமுக தன்னுடைய 12.1.2023 தேதியிட்ட …

பாஜக தலைவர் அண்ணாமலை மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு தமிழக அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று முன்தினம் தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதோடு அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ முயலக்கூடாது என்றும் தமிழிக அரசு அவரது …

ஆன்மிகத் திருவிழாவை பாஜகவின் அரசியல் திருவிழாவாக மாற்ற நினைப்பதை அறிவார்ந்த இந்திய மக்கள் புறந்தள்ளுவார்கள் என திமுக எம்பி டிஆர்.பாலு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே …

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித்தில்; இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் …

மனித – வனவிலங்கு மோதல் உயிரிழப்புக்கான நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மனித வனவிலங்கு மோதல்களை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மனித -வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை …

தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வாழ்த்து செய்தி தெரிவித்திருக்கிறார். மேலும் சமத்துவ பொங்கல் கொண்டாட தமிழக மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமத்துவ பொங்கல் என கோலமிட்டு அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் தமிழக மக்கள் எனக்கு வழங்கும் பொங்கல் பரிசு …

சென்னை மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணி மேற்கொள்ள தமிழ்நாட்டில் உள்ள பிற நகராட்சி மற்றும் மாநகராட்சி சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அப்பணிக்காக பணியாளர்கள் இராஜபாளையம் நகராட்சியின் துப்புரவு அலுவலர் ஜெயப்பால் மூர்த்தி என்பவர் சென்னைக்கு 05.12.2023 அன்று வரும் போது விக்கிரவாண்டி அருகில் ஏற்பட்ட விபத்தில் காலமனார்.

காலமான பணியாளரின் மனைவிக்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து …

இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; வெளிநாடுகளுக்கு போகும் போது கோட் சூட் அணிவது வழக்கம், எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளாதால் இன்று கோட் சூட் அணிந்துள்ளேன். சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது, அதே போல …