காவல்துறையினரால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணச் சுவடு மறையும் முன்னரே மீண்டும் அதே பாணியில் அடுத்த அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுவடையத் துவங்கியுள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர் கிராமத்தைச் […]

தமிழகம் முழுவதும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையிலான ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்குடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தை அனைத்து துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயர்த்திக் காட்டியுள்ளோம். அந்த வகையில், சுகாதாரத் துறை சார்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 […]

வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடைகள் உரிமம் தொடர்பான தற்போதைய சட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ல் 85,649-ஆக இருந்த வணிக உரிமங்களின் எண்ணிக்கை, பழனிசாமி ஆட்சியில் 2020-21ல் 2,05,100 ஆக உயர்ந்தது. அதேபோல, 2011-12ல் ரூ.5.40 கோடியாக இருந்த உரிமக் கட்டணம் பழனிசாமி ஆட்சியில் ரூ.12.90 […]

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 5 பேர், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேர் என மொத்தம் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகை, புத்தளம் கடற்பரப்பில் நேற்று காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகிலிருந்த […]

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த நிலையில் பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது.. ஆனால் இந்த பணியால் புலம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இந்த பணி இன்றுடன் முடிவடைந்த […]

முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் தோல், புற்றுநோய் உள்ளிட்ட பல மருந்துகளுக்குகடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும் நோக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியால் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்ட மக்கள் மருந்தகத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி ‘முதல்வர் மருந்தகம்” என்ற பெயரில் தமிழகத்தில் திறந்தது திமுக அரசு. […]