fbpx

திமுகவின் அடக்க முறைக்கு தமிழக பாஜக அஞ்சப் போவதில்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமிபத்தில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்துடன் சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதன் …

இன்று காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில், அனைத்துத்துறை செயலாளர்களுடன் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் …

மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்க்கு சாரண சாரணியர் இயக்கத்தரைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படக்கூடியது. இதன் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே செயல்படுவது வழக்கம் . சில காலம் எச் ராஜா இந்த பதவியில் இருந்தார்.  பின்னர் இவ்வியக்கத்தின் தலைவர் பதவிக்கான …

நாமக்கல் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளுக்கு முதலமைச்சர் இரண்டு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள நத்தம் மான்குட்டையில் நீச்சல் பழகச் சென்ற ஜனனி என்ற 14 வயது பள்ளி மாணவி, ரச்சனா ஸ்ரீ என்ற 15 வயது மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மாணவிகள் இறப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் …

அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்.5-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் …

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பார்க்க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில்; புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் …

வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில்: காஷ்மீரில் நேற்று அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக்கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் …

மத்திய அரசு குறித்து திமுகவினர் செய்தியை பரப்பி வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; Khelo India திட்டத்தின்‌ மூலமாக அனைத்து மாநிலங்களிலும்‌ விளையாட்டுவிரர்களை ஊக்குவிக்கவும்‌ விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும்‌ மாநில அரசின்‌ திட்டப்‌ பரிந்துரைகளின்‌ அடிப்படையில்‌ மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.ஆனால்‌ இந்த …

நிலம் தந்த குடும்பத்தினருக்கு என்.எல்.சி பணிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்! தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய …

கனமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ள நீரினை எதிர்கொள்ள அனைத்து நிலை அலுவலர்களும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென் மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து …