தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கும் விவகாரம் குறித்து பல்வேறு தரப்பிலும் தொடர் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், எம்எல்ஏ-க்களுக்குக் கார் சொந்தமாக வழங்கப்படவில்லை என்றும், அது 5 ஆண்டுகாலப் பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அவையில் பலரும் மீண்டும் மீண்டும் கார் விவகாரத்தையே முதன்மைப்படுத்திப் பேசி வருவதாக குறிப்பிட்டார். இதற்கு தெளிவான விளக்கம் அளித்த அவர், அரசு […]

தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் க. சபரி ஐங்கரன். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 29-வது வயதில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான சபரி ஐங்கரன், தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக உள்ளார். கல்லூரிப் பருவத்திலிருந்தே சமூக சேவை மற்றும் அரசியல் சார்ந்த […]

தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான வாகனங்களை தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்களின் கார் மாடல்கள் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய முதல்வர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனுடன், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் செலவு உள்ளிட்டவற்றை […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற என். இளையராஜாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், இளையராஜாவின் எம்.எல்.ஏ. பதவிக்கு எதிராக தொடரப்பட்டிருந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஊத்தங்கரை தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட இளையராஜா வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, அதே தொகுதியைச் சேர்ந்த […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் அருண் முன்மொழிந்தார். நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அப்போது, நீட் தேர்வு முறைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு […]

அதிமுகவில் இருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், பாஜகவில் இணையவுள்ளார். புதுவை மாநில அதிமுகவில் புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர். கடந்த 2011-16, 2016-21-ம் ஆண்டுகளில் முதலியார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார். இருப்பினும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். புதுச்சேரி […]

மும்பையில் உள்ள MLA விருந்தினர் மாளிகையில் ஒரு கேன்டீன் ஊழியரை சிவசேனா (ஷிண்டே பிரிவு) சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.. புல்தானா தொகுதி MLA சஞ்சய் கெய்க்வாட், விருந்தினர் மாளிகை கேன்டீனில் வழங்கப்படும் உணவின் தரத்தில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.. இதனால் அந்த கேண்டீன் ஊழியரை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் மோசமாக இருந்ததாகவும், அவர் ஊழியர்களை கடுமையாக சாடியதாகவும், […]