வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 29-ம் தேதி செல்ல உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயிபிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 3-ம் தேதி ‘பழங்குடியினர் ஒற்றுமை பேரணியை மைதேயி பிரிவினருக்கு எதிராக குகி இனமக்கள் நடத்தினர். இதனால் […]
modi
பிரதமா் மோடியிடம் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் கேட்ட அந்த கேள்வி – இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசை விமா்சிப்பவா்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசாங்கமும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீா்கள்? என்பது. அவரது கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, ”எனக்கு நீங்கள் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), வரும் ஜூன் 20ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை அமெரிக்காவில் (US) சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக ஏர் இந்தியா ஒன் (Air India One) விமானத்தில் அவர் பறக்கவுள்ளார். இந்த விமானம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட வேண்டிய தேவையே இல்லாமல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பறக்கும் திறன் ஏர் இந்தியா ஒன் […]
அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள பிபர்ஜாய் புயல் குறித்த நிலைமை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவாகி தற்போது இந்த புயல் குஜராத் மாநிலம் துவாரகாவுக்கு தென்மேற்கில் 380 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது அது தீவிர புயலாக வலுவடைந்து ஜூன் மாதம் 15 […]
ஒடிசா ரயில் விபத்து குறித்து கேள்வி கேட்டால் அவர்கள் நம் மீதே பழி சுமத்துவார்கள் எனவும் மோடி பின்பக்க கண்ணாடியை பார்த்து கார் ஓட்டுகிறார் என்றும் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய வம்சாவளி மக்களிடம் பேசினார். முன்னதாக ஒடிசா ரயில் விபத்தில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு […]
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை தீர்க்காமல் செங்கோல் வைக்கிறார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ஒரு சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். கடவுளுக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடியை அமர வைத்தால், இந்த பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை […]
ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் இந்திய வம்சாவழி மக்களை பிரதமர் நரேந்திர மோடி சிட்னியில் உள்ள பிரம்மாண்டமான அரங்கில் சந்தித்தார். பிரதமரைக்கான சுமார் 21,000 இந்தியர்கள் அந்த அரங்கத்தில் ஒன்று திரண்டனர். அந்த அரங்கத்தில் இதற்கு முன்னர் அமெரிக்க ராக் இசை பாடகர் புரூஸ் ஸ்பரிங்ஸ்டீன் இசை நிகழ்ச்சிக்கு தான் இப்படி பெரும் கூட்டம் கூடும் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 90 நகராட்சித் தலைவர் பதவிகள் மற்றும் 623 வார்டுகளைத் தவிர 17 மாநகராட்சிகளின் மேயர் இடங்களையும் கைப்பற்றியது. கடந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களின் போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிடம் பாஜக தோல்வியடைந்த மீரட் மற்றும் அலிகார் ஆகிய இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இது தவிர, முனிசிபல் கார்ப்பரேஷன் ஆன பிறகு இந்த ஆண்டு […]
எதிர்வரும் 2024 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக தற்போதே தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. 3வது முறையாக மோடி பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்து வருகிறார். அதேபோல திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளை தொடங்கி விட்டனர். அதிலும் காங்கிரஸ் கட்சி தேர்தல் […]
ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் வருகின்ற மே 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது. மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சமிபத்தில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வருகின்ற மே இரண்டாம் தேதி […]