தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தனது எக்ஸ் தளத்தில்: எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறு வதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒருவிதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவமழை தொடங்கும் முன்பே, […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், திமுக அரசு எதை மறைக்கப் பார்க்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. […]

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் மதுரையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் […]

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்; தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை, முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை, சிறு மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது நோயாளிகளை வெள்ளம் சூழ்கிறது, […]

பிறந்தநாளை முன்னிட்டு ஓமந்தூரில் அடிக்கப்பட்டுள்ள பேனரில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படம் இடம்பெறவில்லை. தமிழக பாஜகவினர் பிரதமர் மோடி பிறந்த நாளை சேவை இருவார நிகழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, மருத்துவ முகாம்கள் நடத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, படகு போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரதமர் மோடியின் சாதனைகள், […]

திமுகவை கண்டித்து சட்டமன்ற தொகுதி வாரியாக பாஜக சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் வினோஜ் பி செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் மலிவு, பல்கிப் பெருகியுள்ள போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு என சகல விதத்திலும் தோல்வி அடைந்த ஆட்சியை திமுக அரசு நடத்தி வருகின்றது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழக […]

தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் முதல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, தினசரி 3 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்த ஆலோசனை கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக சார்பில் சிந்தனை அமர்வு கூட்டம் சென்னையில் கடந்த 17-ம் தேதி நடந்தது. இதற்கு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், […]

டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் ஐயா வைகுண்டர் குறித்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கலியுகத்தை அழித்து உலகில் தர்மயுகத்தை ஸ்தாபிக்க அவதார மெடுத்த ஐயா வைகுண்டரை பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஆங்கிலக் கேள்வியில், ‘God of hair cutting’ என்று இழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. தென்தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களால் போற்றப்படுபவரும், தெய்வீக நிலையை அடைந்தவருமான […]