நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளைப் பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 குடியிருப்புகளைக் கொண்ட வகை-VII பல மாடி அடுக்குமாடி குடியிருப்பை, புது தில்லியில் உள்ள பாபா கரக் சிங் (பி.கே.எஸ்) மார்க்கில், இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் குடியிருப்பு வளாகத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூரும் வகையில் மரக்கன்று ஒன்றை நடவுள்ளார். […]
narendra modi
தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில், சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் நமது பிரதமர் […]
இந்திய பிரதமராக தொடர்ச்சியாக அதிக நாட்கள் பணியாற்றியவர்களில், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மூன்று பதவிக் காலங்களாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் 4,078 நாட்கள் நிறைவடைகிறது. அதனடிப்படையில் இந்திய பிரதமராக தொடர்ச்சியாக அதிக நாட்கள் பணியாற்றியவர்களில், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதாவது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1964 முதல் […]
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஜூலை 10-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 வரை பதவியில் […]
இந்தியா எந்த நாட்டில் இருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்கிறது தெரியுமா? நரேந்திர மோடி அரசு பிப்ரவரி 2022க்கு முன்பு ரஷ்யாவிலிருந்து தனது எண்ணெயில் 0.50 சதவீதத்தை மட்டுமே இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் இந்த அளவு கணிசமாக உயர்ந்து 30–35 சதவீதமாக உயர்ந்தது. பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யா இப்போது இந்தியாவின் முக்கிய எண்ணெய் சப்ளையர்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தற்போதைய […]
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா AI-171 விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. உடனே தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள், விமான ஊழியர்கள் என 240க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்திய விமானத்துறையின் வரலாற்றில் மீண்டும் கரும்புள்ளி வைத்தது போல் மாறிவிட்டது. இப்பெரும் துயரச் சம்பவத்தின் இடம் இன்னும் சிதைந்த உலோகங்களும் புகை மூட்டத்துடனும் இருக்க, மீட்பு படையினர் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். […]
2 என்ஜின்கள் மீதும் பறவைகள் மோதினால் வேகத்தை அதிகரிக்கும் சக்தி கிடைக்காமல் விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என DGCA தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என […]
ஆபரேஷன் சிந்தூர் என்ற கருப்பொருளில் ஒரு கட்டுரைப் போட்டியை பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும், டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் 78வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளும் பிரத்யேக வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சகம் X இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் […]
ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப்பெற்றதுபோல் ரூ.500 நோட்டுகளைத் திரும்பப்பெற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்த பின்னர், பெரிய மதிப்பிலான ரூ.500, ரூ.1,000, ரூ.2,000 மதிப்பிலான நோட்டுகள் தேவையற்றது எனவும், அப்போது தான் ஊழலை ஒழிக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் அரசாங்கம் சார்பில் கடப்பாவில் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு; உலகில் […]