வெளிச்சந்தையில் ரூ.60 வரை விற்கப்படும் ஒரு பொருள், இனி ரேஷன் கடையில் வெறும் ரூ.15-க்கு கிடைக்கப் போகிறது என்ற தகவல் குடும்ப அட்டைதாரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், குறைந்த விலையில் கோதுமை மாவை வழங்கும் புதிய முயற்சியை அரசு முன்னெடுக்க உள்ளது. தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்தில் கோதுமை மாவை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. […]

