₹60 கோதுமை மாவு இனி ₹15-க்கு? ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் அதிரடி திட்டம்..

Ration 2025

வெளிச்சந்தையில் ரூ.60 வரை விற்கப்படும் ஒரு பொருள், இனி ரேஷன் கடையில் வெறும் ரூ.15-க்கு கிடைக்கப் போகிறது என்ற தகவல் குடும்ப அட்டைதாரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், குறைந்த விலையில் கோதுமை மாவை வழங்கும் புதிய முயற்சியை அரசு முன்னெடுக்க உள்ளது.


தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்தில் கோதுமை மாவை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.15 என்ற விலையில் பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக முன்னோடி முறையில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. அதில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கோதுமை மாவு பாக்கெட்டுகளை வழங்குவதற்கான முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திட்டத்தை செயல்படுத்தும் முறையும் தற்போது தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து கோதுமை வாங்கி, அதனை ஆலைகளில் அரைத்து மாவாக மாற்றி, பாக்கெட்டுகளில் அடைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாவு விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்த விலையை நிர்ணயிப்பதற்கு முன், பிற மாநிலங்களில் கோதுமை மாவு எந்த விலையில் வழங்கப்படுகிறது என்பது தொடர்பான விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாத வகையில் ரூ.15 என்ற விலையை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோதுமை மாவின் விலை வெளிச்சந்தையில் தற்போது சராசரியாக ரூ.60 என்ற அளவில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ரேஷன் கடைகளில் அதைவிட மிகவும் குறைந்த விலையில் கிடைக்க இருப்பது குடும்பங்களின் மாதாந்திர உணவுச் செலவில் ஓரளவு நிவாரணத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற குறைந்த விலை விற்பனை முயற்சி தமிழகத்தில் புதிதல்ல. இதற்கு முன்பு கூட்டுறவு அங்காடிகள் செயல்படும் முக்கிய பகுதிகளில் கோதுமை மாவு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசும் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் குறைந்த விலை கோதுமை மாவை விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கோதுமை மாவை தொடர்ந்து மற்றொரு அத்தியாவசியப் பொருளின் விலையிலும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 850 டன் வெங்காயம் ரயில் மூலம் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெங்காயத்தை ரேஷன் கடைகள் வழியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படலாம் என்றும், இந்த விற்பனை செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோதுமை மாவு ரூ.15, பெரிய வெங்காயம் ரூ.35 என அத்தியாவசிய சமையல் பொருட்களை குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் முயற்சிகள், சந்தை விலை உயர்வால் சிரமப்படும் குடும்பங்களுக்கு எந்த அளவுக்கு பயன் தரும் என்பது திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு தெரியவரும்.

Also Read: அதிர்ச்சி! 2025ல் தினமும் 660 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு.. 200 பேர் எய்ட்ஸ் காரணமாக உயிரிழப்பு!

Saranya

Next Post

அதிர்ச்சி!. ஜெட் வேகத்தில் உயர்ந்த விமான எரிபொருள் விலை! ஏறுமுகத்தில் பயணக் கட்டணம்?.

Tue Sep 1 , 2026
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை லிட்டருக்கு ரூ.6.28 உயர்த்தியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது மாதமாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் ரூ.115-லிருந்து ரூ.121.28 ஆக (5.46% உயர்வு) அதிகரித்துள்ளது. இந்தியாவில் விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் 35% முதல் 40% வரை விமான எரிபொருளுக்கே செலவாகிறது. எரிபொருள் விலை உயர்வதால் விமான நிறுவனங்களின் செலவு அதிகரிக்கும். எனினும், பயணிகளின் தேவை, நிறுவனங்களுக்கு இடையேயான […]
Flight 2026

You May Like