அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் […]

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், ஓபிஎஸ்-ன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற தலைவர், 3 முறை முதல்வர், அதிமுகவின் முக்கிய தலைவர் என ஓபிஎஸ்-ன் அரசியல் வாழ்க்கையை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது… ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தர்ம யுத்தம் நடத்திய அவர், துணை முதல்வராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.. கட்சிக்கு ஓபிஎஸ், ஆட்சிக்கு என்று […]