தெற்குப் பனாமா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பிராந்தியங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் கடற்கரையோரம் உள்ள பிடலோசா அரிபா என்ற தொலைதூரப் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 10 கி.மீ (6 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனாமா, கொலம்பியா, ஈக்வடார், […]