திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி, அங்கிருந்த விவசாயி சகாதேவனை(45) கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

பிரபல நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நலக்குறைவால் காலமானார். சிறுத்தை, மதராஸி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவர், கடந்த சில தினங்களாகவே சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவில் அவர் உயிர் பிரிந்தது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மீன் வியாபாரம் செய்ததால் ஃபிஷ் வெங்கட் என அழைக்கப்பட்டார். வெங்கட்டின் உடல்நிலை குறித்து தெரிய […]

பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நல குறைவால் காலமானார். பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நல குறைவால் காலமானார். கடந்த சில காலமாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்ட அவர், 2023-ம் ஆண்டோடு நடிப்பதை நிறுத்தினார். கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் […]

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுகவில் தொண்டரணி தொடங்கியது முதல் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர். அய்யாவு மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் […]

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மாமா நேற்று காலமானார். அவருக்கு வயது (72). பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டைத் தொடர்ந்து அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு பெண் குழந்தையும் உள்ளது. அங்கு ஹாலிவுட் படங்களில் […]

கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானியும், மருத்துவருமான எட்டியென்- எமிலி பவுலியூ, 98, வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம்காலமானார். கடந்த, 1926ல் பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் எட்டியென் ப்ளூமில் பிறந்த பவுலியூ, நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் ஆவார். ஸ்டீராய்டு ஹார்மோன்களில் அவரது ஆராய்ச்சிகள், மருத்துவத் துறையில் முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன. கடந்த 1963ல் தனியாக ஹார்மோன் ஆராய்ச்சி பிரிவை அவர் நிறுவினார். அதன் தலைவராக, 1997 வரை இருந்தார். கருக்கலைப்புக்கான, […]