வருங்கால வைப்பு நிதி (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு மிக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை பிஎஃப் (PF) தொகையைப் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய தொழிலாளர் அமைச்சகம் அதிரடி மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகையை யுபிஐ மூலமாக நேரடியாகவும், உடனடியாகவும் வங்கி கணக்கிற்கு […]

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் அதிகப் பயனாளிகள் குறைந்த ஓய்வூதியத் பிரிவில் பதிவு செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடல் ஓய்வூதியத் திட்டம் 2015-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி, ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு சமூகப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் மாதந்தோறும் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3000, ரூ.4,000 அல்லது ரூ.5,000 […]

தமிழகத்தில் ஓய்வுபெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு, மாதம் ரூ.12 ஆயிரம் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பேரிடர் காலங்களிலும் புயல், மழை, பெருவெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போதும் பெரும் விபத்துகள், தொற்று நோய்ப் பரவல்கள் முதலிய சோதனைக் காலங்களிலும் இரவு பகல் பாராது ஓய்வின்றி பணி செய்து, உண்மைச் செய்திகளைத் திரட்டி மக்களிடம் கொண்டு சேர்த்து வரும், பத்திரிகையாளர்களின் […]

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 8.34 கோடி பேர் சேர்ந்துள்ளனர்; இவர்களில் 48% பேர் பெண்கள். 09.05.2015 அன்று தொடங்கப்பட்ட அடல் ஓய்வூதியத் திட்டம், அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக ஏழைகள், சலுகை பெற்றவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு உலகளாவிய சமூகப் பாதுகாப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கி அல்லது தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் 18-40 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் இதற்குத் தகுதி பெறுகிறார்கள். […]

அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் நீண்டகால ஓய்வூதிய நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ), “அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்திற்கு மட்டுமேயான நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பது” என்ற தலைப்பில் ஒரு விரிவான […]

அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் நீண்டகால ஓய்வூதிய நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ), “அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்திற்கு மட்டுமேயான நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பது” என்ற தலைப்பில் ஒரு விரிவான […]

மின் பகிர்மான கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும், 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அடிப்படை சம்பளம் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த அகவிலைப்படியானது 100 சதவீதம் என்ற அளவுக்கு வரும்போது, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். அதன்பிறகு, அந்த சம்பளத்துக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படும். […]

மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை 30.11.2025-க்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தகுதி வாய்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் 2025 ஜனவரி 24 அன்று வெளியிட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள் சிஆர்ஏ முறை மூலம் தங்களது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட விண்ணப்பத்தை […]

ஓய்வூதியதாரர்களுக்கு அஞ்சலகத்தின் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ். மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓய்வூதியதாரர்கள் தங்களது இல்லங்களிலிருந்தபடியே, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை, அஞ்சலக ஊழியர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை நகர மண்டல […]