பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது, பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்றது. இதில், அன்புமணியை விமர்சித்து பலரும் […]

தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பாக பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாமக தலைவர் அன்புமணி வரும் 25-ம் […]

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் இன்று பாமக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்குமாறு தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான திமுக அரசு, இன்னும் இரு மைல்கல்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1200 நாள்களாகும் […]

காமராசரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதற்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக செயல்தலைவர் அன்புமணி ராமதாஸ் காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய சர்ச்சை கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவராக போற்றப்பட்டும்  பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திமுக  துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான  திருச்சி […]

திமுக தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு காரணமாக உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியால் கதை வசனம் எழுதப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற மோசடி நாடகம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களில் இயக்கத்தின் வெற்றிகரமாக அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன. வெற்று விளம்பரத்திற்கான இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பது முதல்நாள் […]