நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அவர்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. தமிழ்நாட்டு மக்களில் ஒரு தரப்பினரின் வாக்குகளை வாங்குவதற்காக வாக்குறுதிகளை அளித்து விட்டு, வெற்றி பெற்ற பிறகு […]
pmk
என் மூச்சிருக்கும் வரை நான் தான் பாமக தலைவர் என்று ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாமக தலைமை பொறுப்பு தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், அன்புமணியுடன் கருத்து வேறுபாடு விவகாரத்தில் இன்னும் முடிவு வரவில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ சமரசம் பேசுகிறோம்.. பேசிக்கொண்டே இருக்கிறோம்.. எல்லா பிரச்சனைக்கும் முடிவு […]
பாமக பிரச்சனைக்கு திமுக காரணமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில், என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான். ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை […]
அதிமுகவுடன் கூட்டணி சேருவதில் பிரச்னை இல்லை, ஆனால் பாஜக இருப்பதால் அது முடியாது. பாமக, பாஜக இடம்பெறும் அணியில் விசிக இடம்பெறாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அவர்களுடன் நட்பின் அடிப்படையில் சந்திப்பு நிகழ்ந்தது அவ்வளவுதான். அண்மையில் ஒரு நிகழ்வில் நாங்கள் பங்கேற்க கூடிய வாய்ப்பு அமைந்தது. விஐடி உரிமையாளர் வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். […]
தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி, பா.ம.க., உடன் உறவை முறித்து கொண்டது, நாங்கள் ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவு. நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பா.ம.க., வன்னியர்களையும், தங்களுக்கு சாதகமாக, கட்சியின் நலனுக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள். தலித்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அவர்கள் கையில் எடுத்தார்கள். முதலில் […]
அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம் நிலவி வருகிறது. மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவரே மருத்துவம் அளித்த காட்சி காணொலியாக வலம் வருவது […]
Anbumani has spoken that if I betray the PMK, it will be the last day of my life.
பாமக நிறுவனர் ராமதாஸிடம், கட்சியின் தலைவர் அன்புமணி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இதனால், இருவரிடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் அதிகார மோதல் உச்சத்தில் இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அடுத்தடுத்து அவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். தலைமை பண்பு கிடையாது, கூட்டணி குறித்து முடிவு […]
பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் இராவணன் நீக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாமகவில் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை மருத்துவர் ராமதாஸ் நியமித்து வருகிறார். அந்தவகையில் தற்போது வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் […]
ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெரும் கொடுமைகளிலில் இருந்தும், பெரும் துன்பங்களில் இருந்தும், பெரும் நெருக்கடிகளில் இருந்தும், வள்ளுவரால்,‘‘அல்லவை செய்தொழுகும் வேந்து’’ என்று விமர்சிக்கப்பட்ட கொடுங்கோன்மையில் இருந்தும் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டிய ஒரு பிரிவு மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் திமுக ஆட்சியின் துயரத்தை […]

