fbpx

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் உள்ள நளசோபரா போலீசார், பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் 25 முறைக்கு மேல் திருமணம் செய்து கொண்ட கல்யாண ராமனை கைது செய்துள்ளனர்.

போலீசார் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. திருமண செயலி மூலம் வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துள்ளார். ஆனால் இந்த திருமணங்கள் சில நாட்கள் …

தீபக் ராஜா இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர்களை அடையாளம் கண்டு காவல் துறையினர் கைது செய்து வருவதாகவும், அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் கடந்த மாதம் தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி …

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். அந்தப் பெண்ணுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியதாகத் தெரிகிறது. அந்தப் பெண்ணுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, இருவரும் முன்பு பேசி இருந்த வீடியோ காலை பதிவு செய்து வைத்திருந்த இவர், அந்தப் பெண்ணை மிரட்டத் துவங்கி உள்ளார். அந்தப் பெண் அளித்த …

தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் ஆந்திரா வங்கியில், 15 நிறுவனங்களின் பெயரில் பல கோடி ரூபாயை ஒருவர் கடனாக பெற்றுள்ளார். இரண்டு வருடங்களாக அவர் பணத்தை செலுத்தி வந்த நிலையில், தனது கடனை புதுப்பிக்க முயன்ற போது, அவர் சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி மோசடியில் ஈடுபட்ட 12 காவல்துறையினர் கைது …

பூனே காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது, ₹2,200 கோடி மதிப்பிலான 1,100 கிலோ எம்.டி. வகை போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த செவ்வாய் அன்று பூனே மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக …

லக்னோவில் மதுபானம் வாங்க பணம் தர மறுத்த வயதான தந்தையை, மகன் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர், இது குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லக்னாவில் உள்ள இந்திரா நகரில் குஷி ராம் சைனி என்ற 70 வயது முதியவர், தனது …

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் அதிகாரிகள், 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத இரு நபர்களுடன் பழகி வந்துள்ளார். அவர்கள் …

தேனி அருகே, கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபரை ஒரு பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே தேவதானப்பட்டியில் மன்மதன் என்பவர் ஜோதிடம் பார்ப்பது, மாட்டு தீவனம் விற்பனை மற்றும் பைனான்ஸ் தொழில் …

டெல்லியில் பிரபல யூடியூபர் ஏற்பாடு செய்த பார்ட்டியில், பாம்புகள் மற்றும் அதன் விஷத்தை விநியோகித்ததாக பரபரப்பு புகார் நொய்டா காவல்துறைக்கு கொடுக்கப்பட்டது. காவல்துறைக்கு கிடைத்த மாதிரிகளில், பாம்பின் விஷம் இருப்பதை, ஜெய்ப்பூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளதை அடுத்து, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ், …

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர், காவல்துறையின் வாகனத்தை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் ரீல் (Instagram reel) எடுத்துள்ளார். காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்த நேரத்தை பயன்படுத்தி, அவர் அந்த ரீலை எடுத்தது தெரிய வந்தது. அந்த ரீல் வைரலான நிலையில் தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் உள்ள …