அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்ய திட்டமிட்டுள்ளேன் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடந்த ‘சஹ்கார் சம்வாத்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், பொது வாழ்க்கையிலிருந்து விலகியவுடன், இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தவும், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் போன்ற இந்து நூல்களைப் படிக்க அதிக நேரம் செலவிடவும் விரும்புவதாகக் கூறினார். இயற்கை வேளாண்மை என்பது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் ஒரு […]

தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவாருக்கு ஆதரவு பெருகி வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் சரத் பவாருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், சரத் பவாருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் சரத் பவாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு […]

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளேன். எடப்பாடி பழனிசாமியே எதிர்காலத்தில் பிரதமராக தகுதியுள்ளவர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரை துவரிமான் பகுதியில் சமுதாயகூடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிக் கூட்டத்தால் பிரயோஜனம் இல்லை. உப்புக்கு சப்பாக தான் அந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த […]

தமிழக அரசியலில் வெற்றி, தோல்விகளை நிர்ணயம் செய்யக்கூடிய அனைத்து தரப்புகளையும் குறிவைத்து, விஜய் பேசியிருப்பது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக, முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.   முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு, எனது தரப்பில் இருந்து ஏதாவது செய்ய வேண்டும் என எனது மனதில் நீண்டகாலமாக ஓடிக்கொண்டு இருந்தது. அதுக்கான நேரம் தான் […]

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் ஆலம்பட்டியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கருணாநிதி மகன் என்ற பின்புலத்துடன்தான் ஸ்டாலின் தி.மு.க தலைவரானார். அதைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் ஆகியிருக்கிறார். ஆனால், எடப்பாடியார் அப்படி அல்ல, 50 ஆண்டுக்கால பொதுவாழ்க்கையில் கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து, கழகப் பொதுச்செயலாளராகி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 25 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனால் தமிழகத்துக்கு […]

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுகவின் 21 மாத கால ஆட்சியை பொறுப்புக்கு மதிப்பெண் வழங்கும் தகுதி இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக முயற்சித்து வருகிறது.அதேபோல அதிமுக கொங்கு மண்டலம் தன்னுடைய கோட்டை என நிரூபிப்பதற்கு […]

திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற ஒன்றரை ஆண்டு காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், இந்த ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் விதமாக மிக விரைவில் ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆகவே இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் ஆளும் தரப்பான திமுக, எதிர்த்தரப்பான அதிமுக, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் மிகக் கடுமையாக போட்டியிட்டு வந்தார்கள். இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்படாத […]

திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய ஒன்றரை ஆண்டு காலம் முடிவடைந்துவிட்டது. இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் திமுக ஆட்சிக்கு மதிப்பெண்கள் வழங்கும் விதத்தில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஆளும் தரப்பான திமுக வரும் 24ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறது. அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலினும், […]

கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாமகவின் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசிய வசனங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்து  தற்போது நிலக்கரி எடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைக் கண்டித்தும் அவர்கள் ஏராளமான பொதுக்கூட்டங்களை நடத்தி வருவது  நாம் அறிந்ததே. அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் அன்புமணி […]