எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் 9-ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கொலை சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம் மதுக்கடைகள் தான்.மின் கட்டண […]

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது. தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும். ஜனவரி 9-ல் கடலூரில் நடக்கும் மாநாட்டில், கூட்டணி குறித்து அறிவிப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எடப்பாடி பழனிச்சாமி வேறு டிராக்கில் மக்களை சந்திக்கிறார். நாங்கள் எங்கள் கட்சியின் செயல்பாடுகள் அடிப்படையில் பயணம் செய்கிறோம். எங்கள் பயணம் வேறு, அவரின் பயணம் வேறு. […]

அரசியலுக்கு வந்தபிறகும் செந்துரபாண்டியின்(விஜயகாந்த்) தம்பியாகவே விஜய் தன்னை காட்டிக்கொள்கிறார் என்று பிரேமலதா கூறியுள்ளார். வேலூர் மாநகர தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஆக. 06) நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் தேர்தல் வியுகம் அமைப்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை […]