சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல காவல்துறை உத்தரவு. போராட்டத்தை தொடர்வதால் பொது அமைதி, பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுகிறது. உத்தரவை மீறி போராட்டத்தை தொடர்ந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை. சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களில் சில வார்டுகள் தவிர மற்ற பகுதிகளில் தூய்மைப்பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. […]

இன்று சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் தவெக ஆர்பாட்டத்திற்கு 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் […]

குடியேற்றத்துக்கு எதிரான போராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லாரன் டோமாசி மீது ரப்பர் தோட்டாவால் போலீஸ் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் குடிபெயர்ந்தவர்களை நாடு கடத்தும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீவிரமாக இறங்கியுள்ளார். குடிபெயர்ந்தவர்களை கண்டறிந்து கைது செய்ய லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய காவல்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ட்ரம்பின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்க மக்கள் […]