3 Patients Die After ‘Technical Snag’ Reduced Oxygen Supply At Jalandhar Hospital
punjab
ஆபரேஷன் சிந்தூர் பெயரை வைத்து வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டுள்ளது என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் […]
சமூகவலைதளங்களில், ஜெயிலில் இருந்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய கைதியின் வீடியோ வேகமாக பரவிய நிலையில் கைதிக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயிலில் அடைக்கப்பட்டும் எவ்வித அச்சமும் இல்லாமல் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது என்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், இச்சம்பவம் நடந்த பின் இரு செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஜெயிலில் இருந்து செல்போனில் பேசியவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலை சட்டப்பிரிவு […]
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ராணுவ மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதி பாட்டியாலாவிலிருந்து சங்கரூருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பக்ரா கால்வாயில் ஒரு பெண் தவறி விழுந்து நீரில் மூழ்கி கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது அங்கிருந்த யாரும் காப்பாற்ற முன்வராத நிலையில், வேகமாக தண்ணீர் ஓடும் கால்வாயில் குதித்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக நீரில் […]
பஞ்சாப் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் விளைவிக்கும் என்று முதல்வர் பகவந்த் மான் கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்; மாநில அரசு துறைகளின் நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருந்தது. இனி காலை 7.30 முதல் […]
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கியாஸ்புரா பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவு சம்பவத்தில் 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளதாக லூதியானா காவல்துறை ஆணையர் மந்தீப் சிங் சித்து தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய பேரிடர் […]
உடல் நலக்குறைவு காரணமாக காலமான பஞ்ச முன்னாள் முதலமைச்சரின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற உள்ள நிலையில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5 முறை பஞ்சாப் முதல்வராகவும், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 95 வயதான அவர் மூச்சுக்குழாய் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த வாரம் மொஹாலியின் ஃபோர்டிஸ் […]
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மறைவையொட்டி மத்திய அரசு 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உள்ளது. 5 முறை பஞ்சாப் முதல்வராகவும், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 95 வயதான அவர் மூச்சுக்குழாய் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பாதலுக்கு அவரது மகனும் சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர் சிங் பாதல் மற்றும் […]
பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பஞ்சாபில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாலை 4.30 மணிக்கு நடந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.. விரைவு நடவடிக்கை குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டு ராணுவ முகாமில் அதி தீவிர சோதனை நடைபெற்று […]
சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் இந்தர் இக்பால் சிங் அத்வால், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ள இந்தர் இக்பால் அத்வால், 2004 முதல் 2009 வரை 14வது மக்களவையின் துணை சபாநாயகராகவும், பஞ்சாப் சட்டசபையின் சபாநாயகராகவும் பணியாற்றிய சரஞ்சித் சிங் அத்வாலின் மகன் ஆவார். அத்வாலுடன், அவரது இளைய சகோதரர் ஜஸ்ஜீத் சிங் […]