இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். இன்று கோவை மாவட்ட […]

இன்று தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தேனி, திண்டுக்கல், […]

ஹிமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர்‌ என மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. அண்டை மாநிலமான பஞ்சாபும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-இல் இருந்து இதுவரை 45 மேகவெடிப்புகள், 95 பெருவெள்ளங்கள், 132 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு, […]

கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களான உத்தராகண்ட், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீரில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும், ஆங்காங்கே மேக வெடிப்பு காரணமாக திடீரென மழை கொட்டித்தீர்க்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொட்டித்தீர்க்கும் மழையால், முக்கிய சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளன. […]

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி,, வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை […]

இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் […]

தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 […]

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சத்தீஸ்கரில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு […]