தி கிரேட் டிக்டேட்டராக தன்னை ஆளுநர் நினைத்துக்கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது அவர் தனது அறிக்கையில்; பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். […]
rn ravi
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பியது. அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைக்கே ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான மசோதா, கடந்த அக்டோபர் மாதம் […]
ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பத்தில் மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஆளுநர் ரவியை சந்தித்து வேதனையை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் பிரபு என்பர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்ததோடு, போராட்டத்தையும் நடத்தியது. அதன்படி நேற்று சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனை முதல் போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி […]
தமிழக ஆளுநரை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் சமிபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவிக்கு எதிராக அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் விடுத்தார். மேலும் ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய போது பேப்பரில் எழுதி கொடுத்த படி படித்திருந்தால் அவர் காலில் பூப்போட்டு அனுப்பியிருப்போம். ஆனால், தமிழகத்தில் இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக் கொடுத்த எங்கள் முப்பாட்டன் அம்பேத்கர் […]
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்க உள்ளார். தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள உதயநிதி கட்டாயம் அமைச்சரவையில் இடம் பெறுவார் என அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பொழுது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை. […]
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவர் முர்முவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். மேலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளார் […]
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் மனுவில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கையொப்பமிட நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது. ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளிக்க உள்ள பொது மனுவில் கையெழுத்திடுமாறு எதிர்க்கட்சிகளை தி.மு.க கேட்டுக் […]
கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சி ஒன்று திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கோயம்புத்தூரில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு குறித்த அரசியல் ஆதாயம் பெறுகின்ற நோக்கில் ஆளுநரும் பாஜகவும் செயல்பட்டு வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு எதிரான நபராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்பது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. அவர் ஆளுநர் என்பதை எல்லாம் மறந்துவிட்டு […]
இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஆளுநரை போல நான் ஒரு பொதுவான பதவியில் இருப்பவன். ஆனால், கோவை கார் குண்டுவெடிப்பு குறித்து எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. ஆளுநர் ஆர் என் ரவி கார் வெடிப்பு சம்பவம் குறித்த தடயங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார். எந்த அடிப்படையில் இப்படி எல்லாம் அவர் கூறுகிறார் என்பது எனக்கு புரியவில்லை. தடயங்கள் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் கிடைத்தால் அரசின் […]
ஆளுநர் ஆர்.என். ரவி போட்டி அரசாங்கம் நடத்த விரும்பினால் அதன் தன்மையை மக்கள் உணர வைப்பார்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்: தமிழ்நாட்டிற்கு ஆளுநராக டில்லி ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள ஆர்.என்.ரவி தான் பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை,தான் பதவி ஏற்கும்போது எடுத்த இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவே செயல்பட்டு வருகிறார் என்பது வெளிப்படையாகவே அனைவருக்கும் புரிகிறது. இந்திய […]