சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரைம் இழந்து […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணங்களை ஒத்திவைத்தார்.. கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதமாக விஜய் எந்த அறிக்கையும் […]

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதை முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. எனினும் விரைவில் அறிவிப்பேன் என அன்புமணி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி; மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாமல் பெயர் மட்டும் வைத்து, திமுக விளம்பர ஆட்சி நடத்துகிறது. நல்ல திட்டங்களை செயல்படுத்த முதல்வருக்குத் தெரியவில்லை.திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பாதியளவு கூட நிறைவேற்றவில்லை. […]

ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தல் ஆணையத்தை பாஜக தனது கிளை அமைப்பாக மாற்றிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின்; எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன், திராவிட இயக்கங்களோடு கம்யூனிஸ்ட்கள் கொள்கை உறவு கொண்டுள்ளன. இந்த உறவு எப்போதும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் தலைமுறைகள் காப்பாற்றப்படும். 1950-ல் சேலம் சிறையில் 22 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த […]

சேலம் மாநகர், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 06.08.2025, புதன்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாநகர், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு 06.08.2025, புதன்கிழமை அன்று உள்ளூர் பள்ளி, விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, அரசுப் பாதுகாப்புக்கான அவசர […]

குரூப்-4 விடைத்தாள் அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சையாக மாறியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு, கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 13.48 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 3.935 […]

சேலம் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம் தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வெண்டை, வெங்காயம், தக்காளி, கத்திரி மற்றும் மிளகாய் போன்ற வீரிய ஒட்டுரக காய்கறிகளின் பரப்பை அதிகரிக்க 125 எக்டர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்த இலக்கு பெறப்பட்டுள்ளது. […]

சேலம் மாவட்டத்தில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொது மக்கள் இ-சேவை மையம் மற்றும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நத்தம் இணைவழி பட்டா மாறுதல் திட்டம் 04.03.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, […]