இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு முக்கியமான அடையாள அட்டையாகும், இது ஒரு நபரை அடையாளம் காணவும் பல்வேறு அரசு சேவைகளைப் பெறவும் அவசியம். இருப்பினும், ஒருவர் இறந்த பிறகு, அவரது ஆதார் அட்டையை செயலில் வைத்திருப்பது பெரும்பாலும் அடையாளப் பிழைகள் அல்லது மோசடிக்கு வழிவகுக்கும். இறந்த நபரின் ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் […]

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.87 கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக சமூகத் தணிக்கையில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. […]

டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கியாளரான 78 வயதான நரேஷ் மல்ஹோத்ரா, தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.23 கோடியை சைபர் குற்றவாளிகளிடம் இழந்தார்.. அவர் “டிஜிட்டல் கைது” செய்யப்பட்டார். ஆகஸ்ட் 4 ஆம் தேதி மும்பை காவல்துறை அதிகாரி என்று கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தபோது இந்த மோசடி தொடங்கியது. இது செப்டம்பர் 4 ஆம் தேதி வரை தொடர்ந்தது, அதன் பிறகு மோசடி செய்பவர்கள் அவரைத் தொடர்பு கொள்வதை […]

அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்தில் நேற்று மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: மதுரை மாவட்டம் அதிமுக கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு […]

வேலைவாய்ப்புத் தொடர்பான மோசடியான இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் சார்பில் பணியாளர் சேர்ப்புக்காக https://viksitbharatrozgaryojana.org/ மற்றும் https://pmviksitbharatrozgaryojana.com/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த இணையதளங்களுக்கும் அமைச்சகத்துக்கும் எந்தத் […]

பத்திரப்பதிவு எங்கு நடந்தாலும் அமைச்சருக்கு 10 % கமிஷன் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழலை தோண்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் நேற்று மதுரை ஒத்தக்கடையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: அதிமுக ஆட்சியில் தான் அதிக போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு அனுமதி வழங்கினோம். போராட்டங்களை சந்திக்கும் தில், […]

தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மோசடி செய்வதை மன்னிக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்து, தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகளும், திமுக மாநாகராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சென்று தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்த நிலையில், […]

திமுக ஆட்சியில் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான நேற்று திருப்பரங்குன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; “மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. அரசு நடத்திய […]

விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தை மறு ஆய்வு செய்து புதிய கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட வேண்டும்” என அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல் நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் […]