கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் […]

பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுகுறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் […]

சூடானில் பள்ளி, மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோனை ஏவி தாக்குதல் நடத்தியதில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழப்பு. சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ரேபிட் சப்போர்ட் போர்சஸ்(ஆர்எஸ்எப்) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் கோர்டோபான் மாகாணத்தில் உளு்ள கலோகி நகரில் உள்ள ஒரு சிறுவர்கள் பள்ளி, மருத்துவமனை மீது ஆயுத குழுவான ஆர்எஸ்எப், நேற்று இரவு ட்ரோன் […]

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மாதம் ‘காக்கா முட்டை’ எனும் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் […]

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் கூடும். இதன் காரணமாக இன்று தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, […]

தமிழகத்தில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், 4 தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்தவும் பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்: ‘தொலைதூர கிராமங்கள், மலைப் பகுதிகள், புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஏற்கெனவே உள்ள 4 தொடக்கப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்’ என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். இதையடுத்து,இதற்கான கட்டமைப்பு […]

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பரில் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 10-ம் தேதி […]

தமிழக அரசின் இலக்கியத் திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு […]

மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் தமிழக அரசாங்கம், அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்படுகிறது. அது போலவே, மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்திற்கான அடுத்த […]