தமிழ் மாதங்களில் ஒன்றான புரட்டாசியில், பல குடும்பங்களில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவை மட்டுமே உண்பதும், விரதமிருந்து வழிபாடுகளில் ஈடுபடுவதும் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். இதற்குப் பின்னால் ஆன்மீக நம்பிக்கைகள் மட்டுமன்றி, அறிவியல் சார்ந்த உடல்நலக் காரணங்களும் அடங்கியுள்ளன. அறிவியல் காரணம்: புரட்டாசி மாதம் என்பது வெயில் காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கும் ஒரு இடைப்பட்ட பருவக்காலமாகும். கோடை காலத்தில் பூமியில் தேங்கியிருந்த வெப்பம், […]