நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்த நடிகை விஜயலட்சுமி, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “இலங்கையில் தமிழர்களுக்காக பிரபாகரன் உயிரை கொடுத்து போராடிக்கொண்டு இருந்தபோது, இலங்கையில் தமிழர்கள் எல்லாம் செத்துக்கொண்டு இருந்த போது, இங்க என் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு, குடித்துக்கொண்டு ஆட்டம்போட்டுக்கொண்டு எல்லாத்தையும் பண்ணிட்டாரு. தலைவர் பிரபாகரனுடைய மகன் பாலச்சந்திராவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஒரு […]

முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிட நியமனம் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த […]

நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன் விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தனர். அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி […]

திருச்சி திருவெறும்பூரில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசனின் 75வது பிறந்தநாள் விழா நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மணியரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், திருவெறும்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் […]

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கு தொடங்கி, முதல் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.  அவர்கள் இந்திய தகவல் […]

முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரையும் அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுக்காலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறைதண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு விடுதலை பெற்றுள்ள தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செய்தியையும், […]