சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்றத் திணறும் தவெக அரசு, ரூ.1200 கோடி செலவில் அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முயல்வது கண்டனத்திற்குரியது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி இருப்பதாகக் கூறிவிட்டு, […]