இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR என்று அழைக்கப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதனை பண மதிப்பிழப்பு நடவடிக்கை உடன் ஒப்பிட்ட அவர் SIR என்பது வாக்கு மதிப்பிழப்பு நடவடிக்கை என்று தெரிவித்தார். சிலிகுரியில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு முன்பே SIR நடத்த வேண்டிய அவசியம் என்று என்று கேள்வி எழுப்பினார்.. மேலும் தேர்தல் ஆணையம் உடனடியாக […]

கோவில்பட்டியில் 30 சதவீத வாக்காளரை காணவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சுட்டியுள்ளார். கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு; தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு புகார் சென்றதால், எஸ்ஐஆர் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இது ஒன்றும் புதிது அல்ல. இதற்காக ஏன் திமுக […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நிரப்பும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in -ல் எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைனில் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை […]

முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டது. இந்த நிலையில், 2026 தொடக்கத்தில் தமிழகம், […]

எஸ்ஐஆர் படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் மொத்தமாக கொடுத்து விநியோகிப்பதை தடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; வாக்காளர் பட்டியல் நேர்மையாக இருந்தால்தான் தேர்தலும் நேர்மையாக நடக்கும். அந்த வாக்காளர் பட்டியலில் இறந்து போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், மாயாவிகள் இடம்பெறக் கூடாது என்பதற்காகத்தான் வாக்காளர் பட்டியல் […]

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக நவம்பர் 11-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இது குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்ஐஆருக்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு […]

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டுள்ளது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, […]

அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் ஸ்டாலின், தற்போது மட்டும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம். பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் […]

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மாவட்ட பொறுப்பாளர்கள் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, இது […]

பாஜகவுடன் கூட்டணி வைத்த நாள் முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; வாக்காளர் பட்டியலில் சரி பார்ப்பது தவறில்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களை நீக்க வேண்டும். எந்த விசாரணையும் இன்றி சிலரை சேர்க்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும் வருகிறது. யார் பெயரை நீக்கினாலும் அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வேலைக்கு என […]