fbpx

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழுக்கு தொண்டாற்றிவரும் பெருமக்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.3,500-ம், மருத்துவப்படியாக ரூ.500-ம் என ரூ.4,000 உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது.…

‘TN Alert’: டிசம்பர் மாதம் நெருங்க நெருங்க மழை வெள்ளம் பற்றிய சிந்தனைகள் எழுவதை தடுக்கமுடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் நினைவுகள் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மழை வெள்ள பிரச்னையை எதிர்கொள்ள புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது அரசு. அதன் ஒரு பகுதியாக TN-Alert என்ற செயலியை அறிவித்திருக்கிறார் …

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் திங்கள்தோறும் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, …

திருக்குறள் முற்றோதல் போட்டி நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம்வயதிலேயே அறிந்து கொண்டு. கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம்” …

“தமிழ்ச் செம்மல் விருது” பெறுவதற்கு தமிழ் ஆர்வலர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச்செம்மல் விருது” 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்ச்செம்மல் விருது பெறுபவர்களுக்கு ரூ.25,000 பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

2024-ஆம் ஆண்டிற்கான …

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் நிகழ்ந்து 10 நாட்களுக்குப் பிறகும் , கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் தற்போதைய நிலவரப்படி சுமார் 16 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 148 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், 65 பேர் இறந்துள்ளனர். இதுவரை, 111 பேர் கள்ளக்குறிச்சி ஜிஹெச்சில் சிகிச்சை …

ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் தற்கொலைக்கு நிகரானது என NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவா் கூறுகையில், ”நீண்ட காலமாகவே ஆங்கிலவழிக் கல்வி மீது பெற்றோருக்கு ஒரு ஈர்ப்பு, மோகம் அதிகம் உள்ளது. அரசுப் பள்ளிகளில் தற்போது தரமான கல்வி வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான …

போதை பொருள் பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்ட நடிகை ஹேமா, நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகை ஹேமா பெங்களூருவில் உள்ள பிரபல ஹோட்டலில் போதை விருந்தில் கலந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், ஹேமா உள்ளிட்ட 86 பேர் போதை …

கள்ள உறவில் ஈடுபட்டதால், நடிகை நிகிதா கன்னட சினிமாவில் நடிக்க 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

பகத் பாசில் ஹீரோவாக அறிமுகமான ‘கையேதும் தூரத்து’ என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிகிதா துக்ரல். இப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் நிகிதா. விஷ்ணுவர்தன் இயக்கிய குறும்பு படத்தின் …

டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டியதால் நேர்முகத் தேர்வு முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், ”தமிழக அரசின் வேளாண் துறையில் வேளாண் அலுவலர், தோட்டக் கலை அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு …