An order has been issued transferring the death case of Ajith Kumar, who died during the police investigation, to the CBI CID.
Tamil Nadu
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக கோவை சின்னக்கல்லாரில் 9 செமீ மழை பெய்துள்ளது. இதே போன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், விழுப்புரம், தேனி, நீலகிரி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தஞ்சை குமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை […]
தமிழகத்தில் விற்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எவ்வித குறைபாடும் இல்லை என்று மாநில மறுத்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாத்திரை, மருந்துகளின் தரம் குறித்து மே மாதம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் சில மாத்திரை, மருந்துகளின் தரம் குறைவாக இருந்தது. இந்த மாத்திரை, மருந்துகளை மக்கள் பயன்படுத்தும்போது அது உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாத்திரை, மருந்துகள் […]
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பிடெக் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தொடங்கி ஜூன்.26ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை […]
தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது. இதனால், வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாகவே காலை முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக இரண்டு பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 என்பது 2019 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஒரு தொற்றுநோய் வைரஸ் ஆகும். உலக நாடுகளில் இப்போதுவரை கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆரோக்கியத்திலும் சரி, பொருளாதாரத்திலும் சரி கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் ஆறாத ரணமாக மாறியுள்ளது. அந்த பாதிப்புகளே முழுமையாக விலகாத நிலையில், உலகளவில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க […]
மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் இன்று பாஜக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா பங்கேற்றார். அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், அவரது பயணத்தை முன்னிட்டு சென்னை மற்றும் மதுரையில் வைக்கப்பட்ட பேனர்கள், அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. “எங்க தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு Out of Control தான்”, “டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது” போன்ற வாசகங்களுடன் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள், கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. அப்போது அவர், “தமிழ்நாடு […]
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ, இன்று காலை பெங்களூரு அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார். இந்த விபத்தில் காயமடைந்த ஷைன், அவரது தாயார், சகோதரர் மற்றும் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரிக்கு அருகிலுள்ள பாலக்கோட்டை அருகே காலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஷைன் டாமின் குடும்பத்தினர் எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது. அவர்களின் […]

