மதுபான விற்பனை விவரம், டாஸ்மாக் கணக்கில் செலுத்திய தொகை இடையே மாறுபாடு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: மதுபானக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை ரொக்கம், கார்டு மற்றும் யுபிஐ ஆகியவை மூலம் நடைபெறும் நிகழ்வுகளில், மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் மட்டுமே அவைகளை விற்பனை செய்து இருக்க வேண்டும். இந்த நடைமுறையில் […]

மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவு […]

டாஸ்மாக் மூலம் நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திருச்செங்கோட்டில் பேசிய அவர்; கரூரில் அண்மையில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்தக் கூட்டம் சரியான முறையில் நடைபெறக் கூடாது என்பதற்காக பிரச்சினை உருவாக்கப்பட்டதாக […]

தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைப்பது வழக்கம். அதன்படி, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி […]

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைப்பது வழக்கம். அதன்படி, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “வருகிற 02-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான […]

முஸ்லிம்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபி இன்று கொண்டாடப்படுகிறது‌. இதை முன்னிட்டு இன்று மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதி மற்றும் தமிழ்நாடு மதுபான விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், கிளப்பார்கள், ஓட்டல் பார்கள், மதுபான […]